உதகையில் திபெத்தியர்கள் அமைதி ஊர்வலம் - ஏராளமானோர் பங்கேற்பு
திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேறவும் திபெத்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை.;
உதகையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற திபெத்தியர்கள்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, திபெத்தில் இருந்து அகதிகளாக திபெத்தியர்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தனர். அவர்களுக்கு தாவரவியல் பூங்கா அருகே கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அங்கு திபெத்தியர்கள் உல்லன் ஆடைகள் போன்ற கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நீலகிரி திபெத்தியன் அகதிகள் நலவாழ்வு சங்கம் சார்பில், திபெத்தை சீனா கைப்பற்றிய 63-ம் ஆண்டை முன்னிட்டு அமைதி ஊர்வலம் ஊட்டியில் நடைபெற்றது. திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற வேண்டும், திபெத்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊட்டியில் முக்கிய பகுதிகளில் ஊர்வலம் நடந்தது.