124-வது மலர் கண்காட்சிக்கு தயாராகிறது உதகை தாவரவியல் பூங்கா

124-வது மலர் கண்காட்சிக்கு உதகை தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது.;

Update: 2022-05-11 07:06 GMT

ஊட்டி மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

உதகையில் மே 20 ம் தேதி முதல் 24 வரை 5 நாட்கள் நடைபெறவுள்ள 124 வது மலர் கண்காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 270 ரகங்களில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்களை மாடத்தில் அடுக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி. அம்ரித் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

2 ஆண்டுகளுக்கு பின் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 20 ஆம் தேதி தொடங்கவுள்ள  124வது மலர் கண்காட்சிக்காக மலர் மாடத்தில் வண்ண மலர்களை காட்சிப்படுத்தப்படும் பணி  இன்று தொடங்கியது.மலர் மாடத்தில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஜெரோனியம்  சைக்லமென்,  சினரேரியா கிலக் சீனிய, ரெனன் குலஸ், மற்றும் பல புதிய ரக மலர்களான  ஆர்னமெண்டல்கேல்,  ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி உள்ளிட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும் பூங்காவில் ஆங்காங்கே மலர்  பாத்திகள் அமைத்து நடவு செய்யப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் மேலான மலர்ச்செடிகள் தற்போது பூத்து குலுங்குவதாகவும்,  இந்த ஆண்டு மலர் காட்சிக்காக 20 ஆயிரம் பல வண்ண மலர்களால் பல வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.  மலர் காட்சியில் 275 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன  என்பது கூடுதல் சிறப்பாகும்.

குறிப்பாக  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலிப் , ரெனன் குலஸ்,  சைக்லெமென்   உள்ளிட்ட கொய்மலர்கள்,  வீரிய பல்வேறு மலர்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர்  சிபிலாமேரி  கூறினார். 

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள 124வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளதால் பூங்காவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க லட்சக்கணக்கான மலர்கள் மாடத்தில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News