நீலகிரி மாவட்ட பறக்கும் படையினர் இதுவரை ரூ.40.56 லட்சம் பறிமுதல்
நீலகிரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் இதுவரை ரூ.40.56 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 291 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் நாள் நெருங்கி உள்ளதால் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
உதகை நகராட்சியில் பறக்கும் படையினர் சுற்றுலா வாகனங்கள், வெளிமாநில வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இன்றி எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது.
இதுவரை ரூ.40 லட்சத்து 56 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.