உதகை சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை; வாகன ஒட்டிகள் அச்சம்

உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-08-29 02:30 GMT

சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதை வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் யானைகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சுமார் 7 மணி அளவில் பணிக்கு சென்று தொழிலாளர்கள் வீடு திரும்பும்போது, ஒற்றை காட்டு யானை சர்வசாதாரணமாக சாலையில் நடந்து சென்றதைக்கண்ட வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் யானை வனப் பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News