நீலகிரி: வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

4.85 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-04-18 12:23 GMT

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 4.85 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டபல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட கனாகம்பையில் ஜல்ஜீவன்மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.9.34 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர் குழாய்பணியினையும், தொட்டண்ணி மட்டம் முதல் மேல் அஜ்ஜூர் வரை மூலதனமானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.13.20 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலைபணியினையும், கட்டபெட்டு, இடுஹட்டி சாலை முதல் அஜ்ஜூர் வரை பிரதான்மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.103.98 இலட்சம் மதிப்பில்மேம்படுத்தப்பட்ட சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவைர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட அஜ்ஜூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.00 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மேற்கூரையினையும், 14 நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.8.18 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கக்குச்சி கிராம சாலை பணியினையும், கூக்கல் ஊராட்சிக்குட்பட்ட கம்பட்டி கொம்பை முதல் இந்திரா நகர் வரை மூலதனமானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை பணியினையும், தூனேரி ஊராட்சிக்குட்பட்ட தூனேரி முதல் உல்லுபட்டி வரை மூலதன மானிய நிதிதிட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை பணியினையும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.40.42 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மேல் தொரையட்டி சாலை பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட போர்த்தியில் ஜல்ஜீவன் மிஷன்திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர் குழாய்பணியினையும், இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட இத்தலார் பெரியார் நகர் மூலதனமானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.25.66 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை பணியினையும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.100.34 இலட்சம் மதிப்பில் கோத்தகண்டி மட்டம் முதல் கரிக்காடுமுக்கு வரைமுடிக்கப்பட்ட சாலை பணியினையும் நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட நஞ்சநாடு மெயின் ரோடு முதல் நரிக்குழிஹாடா வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.110.00 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை பணியினையும் என மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்திருமதி.கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளர் திருமதி.சுஜாதா, உதகைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஜனார்தனன், திரு.ஆறுமுகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News