உக்ரைனிலிருந்து உதகை வந்த மாணவி மத்திய அரசுக்கு நன்றி

உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக உதகை வந்தடைந்த மாணவி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.;

Update: 2022-03-05 15:32 GMT

உதகை வந்தடைந்த மாணவியை வரவேற்ற பாஜகவினர்.

ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. உக்ரைனில் மருத்துவப் படிப்பு பயின்று வரும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கினர்.

மத்திய அரசு, வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்தது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 20 பேர் உக்ரைனில் சிக்கினர். அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 5 பேர் தாயகம் திரும்பி நீலகிரி மாவட்டம் வந்தடைந்தனர். இதில் உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகள் சாகித்யா உக்ரைனில் இருந்து நீலகிரி திரும்பினார்.

அவர் மருத்துவப் படிப்பு 5-ம் ஆண்டு படித்து வருகிறார். போருக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய அவரை பா.ஜ.க.வினர் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றனர்.

இதுகுறித்து மாணவி சாகித்யா கூறும்போது, உக்ரைனில் சிக்கியபோது மத்திய அரசு உதவி செய்ததால் பாதுகாப்புடன் தாயகம் திரும்பினேன். அங்கு எல்லையை கடந்தது, விமானம் ஏறியது வரை வெளியுறவு அமைச்சகம் அனைத்து உதவிகளையும் செய்தது.

3 நாள் உணவு, தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பாதுகாப்பாக அழைத்து வந்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News