ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது: கலெக்டரிடம் மனு

டிச 22ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது என மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-12-17 17:00 GMT

பைல் படம். 

நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடும் வகையில் வருகிற 22-ந் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் ஹெத்தையம்மன் விழாவின் போது மது, மாமிசம் பயன்படுத்துவது இல்லை. இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். தனி சிறப்பு வாய்ந்த விழாவின்போது அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததை சுட்டிக் காட்டுகிறோம்.

நீலகிரி மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு வருகிற 22-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News