நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Update: 2022-03-22 14:39 GMT

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அரசு திட்ட பணிகளில் இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும், திட்ட பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் அதனை முடிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் சலீம் தலைமை  வகித்தார். போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு ஆணை வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலர்கள், கணினி இயக்குனர்கள், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News