உதகையில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று, தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-06 12:48 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில்,  மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று, மாவட்ட ஆட்சி தலைவர் இன்ன சென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில், தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதால், உணவுப்பொருட்கள் தடையின்றி பழங்குடியின மக்களுக்கு கிடைக்கிறது.  தர்மபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை இல்லாமல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. இதற்கு ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மலைமாவட்டம் என்பதால்  நீலகிரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது  வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணையை உயர்த்தி வழங்க, அரசிடம் பரிந்துரைக்கப்படும். மத்திய அரசு ரேஷன் கடைகளில் பயோ  மெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதையடுத்து  இம்முறை நியாய விலை கடைகளில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு குடும்பத் தலைவரோ, அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவரோ சென்று கை கைரே பதிவு செய்து பொருட்களை வாங்கலாம் என்றார்.

Tags:    

Similar News