உதகை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக உதகை கலெக்டர் அலுவலகத்தில பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ பிரிவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி உதகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கு மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.