உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுது

உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்த எந்திரங்கள் மாற்றி மொத்தம் 15 எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-17 12:00 GMT

பழுதடைந்த வாக்கு எந்திரங்களை மாற்றும் அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்கு எந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி முடிந்தது.

பணியின் போது ஊட்டி நகராட்சியில் 3 கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் 12 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது.

இன்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டது. பழுதடைந்த 4 எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு, மாவட்ட பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதற்கு பதிலாக 4 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு, நகராட்சி பாதுகாப்பு அறையில் கொண்டு வந்து சீல் வைக்கப்பட்டது. உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுது உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்த எந்திரங்கள் மாற்றி மொத்தம் 15 எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News