உதகையில் வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு

உதகையில் கனரக வாகனங்கள் ஆய்வு கட்டுப்பாடுகளை மீறிய கனரக வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.;

Update: 2021-12-28 11:07 GMT

உதகை உழவர் சந்தை முன்பு உள்ள எடைமேடை பகுதியில் கனரக வாகனங்கள் எடை சரி பார்த்த பின்பு கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்தார்.

உதகை நகரில் பல பகுதிகளில் கனரக வாகனங்கள் மூலம் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதை முறையாக கனரக வாகனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என வட்டார போக்குவரத்து அலுவலர் டி.தியாகராஜன் திடீர் சோதனை மேற்கொண்டார்.

உதகை உழவர் சந்தை முன்பு உள்ள எடைமேடை பகுதியில் கனரக வாகனங்கள் எடை சரி பார்த்த பின்பு கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

தொடர்ந்து விதிமுறைகளை மீறி கனரக வாகனங்களில் அளவுக்கதிகமான பாரத்தை ஏற்றிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.

Similar News