உதகை தீயணைப்பு நிலையத்தில் சப்-கலெக்டர் ஆய்வு
மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறுகள், உயிர் பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட கருவிகள் தயார் நிலையில் வைக்க சப் கலெக்டர் அறிவுரை.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். உதகை சப்-கலெக்டர் மோனிகா உதகை தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவமழை ஒட்டி சிறப்பு தளவாடங்கள், கருவிகள் தயார் நிலையில் உள்ளதா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறுகள், உயிர் பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட கருவிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் உடனிருந்தனர்.