உதகை ரோஜா பூங்காவில் விவசாய நில மண் தரம் குறித்து ஆய்வு
ரூ.20 கட்டணம் செலுத்தி பயிரிட போடும் விளைநிலங்களின் மண்ணை ஆய்வு செய்து பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளலாம்
உதகை ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் ரூ.20 கட்டணம் செலுத்தி பயிரிட போடும் விளைநிலங்களின் மண்ணை ஆய்வு செய்து பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.
பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், நுண்ணூட்டச் சத்துக்கள் வழங்க வேண்டும். இதன்மூலம் உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாடு, மண்ணின் வளத்தை குறைப்பதோடு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மண்ணின் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்து பரிந்துரை அடிப்படையில் உரமிட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.