உதகையில் சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு

பொள்ளாச்சியில் பெரிய அளவில் பலூன் திருவிழா நடத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2021-12-06 11:00 GMT

படகு இல்லத்தை ஆய்வு செய்த அமைச்சர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின கீழ் இயங்கும் உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் பங்கேற்றதை மத்திய அரசால் பாராட்டப்பட்டதாக கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கேபிள் கார் அமைப்பது குறித்து உள்ள சாத்திய கூறுகள் ஆராயப்படும் என்றார். கோவிட் பெருந்தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பின்னடைவை எதிர்கொண்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரு மாதத்தில் மட்டும் இணைய முன்பதிவு மூலம் 22 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளதாக கூறினார் .

பைக்காரா படகு இல்லத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக குளிர் காலத்தில நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இந்த ஆண்டு நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News