டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் உதகை மாணவி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்தனர்.;

Update: 2022-01-27 09:25 GMT

மாணவி சரண்யா.

உதகை பட்பயர் பகுதியை சேர்ந்த சரண்யா, கோவை தனியார் கல்லூரியில் உடற்கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் மாணவி சரண்யா பங்கேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்தனர். இதுகுறித்து மாணவி சரண்யா கூறும்போது, அணிவகுப்பு, கலாச்சார நடனம் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 10 பேர் தேர்வாகி அணிவகுப்பில் பங்கேற்றோம். குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News