உதகையில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2021-10-16 13:00 GMT

ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள் 

புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மாதம் கடந்த 4 வாரங்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் சனிக்கிழமை சிறப்பு பூஜையில் பக்தர்களால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி ஊட்டி பழைய அக்ரகாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சி அளித்தார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே போல் பிற பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

Tags:    

Similar News