உதகையில் வங்கிகள் நடத்தும் சிறப்பு லோன் மேளா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு கடன் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
இந்திய அரசின் நிதித்துறை ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு கடன் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கான மேம்பாட்டு முயற்சி திட்ட முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் (திங்கட்கிழமை) உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெறுகிறது.
முகாமில் விவசாயம், தொழில் முனைவோர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு அனைத்து வகையான கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தகுதியான நபர்கள் வங்கிகளிடம் கடன் விண்ணப்பங்களை கொடுத்து கடனுதவி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா தெரிவித்து உள்ளார்.