நீலகிரியில் 3 ம் பாலினத்தவர்க்கான சிறப்பு முகாம்

புதிய ஸ்மார்ட் கார்டு பெற விரும்பும் திருநங்கைகள் மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது;

Update: 2022-01-05 13:00 GMT

கலெக்டர் அம்ரித்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வருகிற 8-ந் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு ரேஷன் அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் புதிய மின்னணு ரேஷன் அட்டைக்கான விண்ணப்பத்தினை புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் ஆகிய ஆவண நகல்களுடன் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்க வேண்டும். புதிய ஸ்மார்ட் கார்டு பெற விரும்பும் திருநங்கைகள் மேற்கண்ட முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News