உதகையில் ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 4 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1,31,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.