நீலகிரியில் இதுவரை ரூ 2.26 கோடி பறக்கும் படை பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை நடததிய அதிரடி சோதனையில் இதுவரை 2 கோடியே, 26 லட்சத்து 75 ஆயிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றுவரை ஆவணம் இன்றிஎடுத்துச் செல்லப்பட்டதாகரூ.2 கோடியே 26லட்சத்து 75 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த மாதம் 26 ம்தேதி தேதி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது.
அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொண்டு வருவதை தடுத்திடவும்,பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுத்திடும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படை என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ம் தேதியில் இருந்து ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டுச் சென்றவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.நீலகரி மாவட்டத்தில் 197 பேரிடம் இருந்து ரூ.2கோடியே 26 லட்சத்து 75ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.