உதகையில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசிய சாலை ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-10-06 09:45 GMT

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சாலை பணியாளர்கள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், நீலகிரியில் சாலை பணியாளர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசிய சாலை ஆய்வாளரை கண்டித்து நீலகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 3 சாலை பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய சாலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News