உதகையில் காேடப்பமந்து கால்வாயில் முட்புதர்களை அகற்ற காேரிக்கை

உதகை நகரில் உழவர் சந்தையை ஒட்டியுள்ள நீரோடையில் முட்கள் அகற்றப்படாமல் உள்ளது..

Update: 2021-08-17 04:40 GMT

உதகை நகரில் உழவர் சந்தையை ஒட்டியுள்ள நீரோடையில் முட்கள் அகற்றப்படாமல் உள்ளது.

உதகையில் பிரதான கால்வாயாக உள்ள கோடப்பமந்து கால்வாயில் அதிக அளவிலான செடிகள் முட்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் நீர் தேங்கி நிற்கிறது.

உதகை படகு இல்ல ஏரிக்கு சென்றடையும் இந்த கால்வாய் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாேடு நோய் தொற்றும் அபாயம் ஏற்படுகிறது.

இந்நிலையில் உழவர் சந்தையை ஒட்டியுள்ள கால்வாயில் முட்புதர்கள் வெட்டி அகற்றப்படாமல் உள்ளதால் குப்பைகள் தேங்கி நின்று தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முட்புதர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News