உதகையில் கால்வாய் ஆக்கிரமைப்புகள் அகற்றம்: ஆணையாளர் அதிரடி
உதகை நகராட்சி சார்பில் நகரப்பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வரும் நிலையில் கால்வாயை ஆக்கிரமைப்பு செய்த கடைகள் அகற்றம்;
உதகை நகராட்சியில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சேரிங்கிராசில் நொண்டிமேடு பகுதியில் இருந்து வரும் மழைநீர் கால்வாய் அடைத்து இருந்ததால், சாலையில் வெள்ளம் வழிந்தோடியது. இதனை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள் அந்த மழைநீர் கால்வாய் செல்லும் பகுதியை பார்வையிட்டனர்.
அப்போது கால்வாய் மேல் பகுதியை ஆக்கிரமித்து ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து வைத்த ஓட்டலை அகற்ற ஆணையாளர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஓட்டலில் இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கால்வாயில் வேறு ஏதும் அடைப்பு உள்ளதா என்று பார்வையிட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.