நீலகிரியில் பரீசீலனை செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் மொத்தம் 1,382 மனுக்களில் 22 தள்ளுபடி செய்து 1,360 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
நீலகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. உதகை நகராட்சியில் 9, குன்னூர் நகராட்சியில் 1, நெல்லியாளம் நகராட்சியில் 3 என 4 நகராட்சிகளில் 13 வேட்புமனுக்களும், பிக்கட்டி பேரூராட்சியில் 1, உலிக்கல் பேரூராட்சியில் 1, ஜெகதளா பேரூராட்சியில் 2, கேத்தி பேரூராட்சியில் 1, கோத்தகிரி பேரூராட்சியில் 1, ஓவேலி பேரூராட்சியில் 3 என 11 பேரூராட்சிகளில் 9 வேட்புமனுக்களும் என மொத்தம் 22 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
உதகை நகராட்சியில் 203, குன்னூர் நகராட்சியில் 145, கூடலூர் நகராட்சியில் 121, நெல்லியாளம் நகராட்சியில் 119 என மொத்தம் 588 பேர், அதிகரட்டி பேரூராட்சியில் 76, பிக்கட்டி பேரூராட்சியில் 52, தேவர்சோலை பேரூராட்சியில் 78, உலிக்கல் பேரூராட்சியில் 75, ஜெகதளா பேரூராட்சியில் 69, கேத்தி பேரூராட்சியில் 75, கீழ்குந்தா பேரூராட்சியில் 59, கோத்தகிரி பேரூராட்சியில் 125, நடுவட்டம் பேரூராட்சியில் 46, ஓவேலி பேரூராட்சியில் 65, சோலூர் பேரூராட்சியில் 52 என மொத்தம் 772 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மொத்தம் 1,382 மனுக்களில் 22 தள்ளுபடி செய்து 1,360 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.