ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

Update: 2021-04-12 11:30 GMT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பனி மற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறைபனியும், நீர் பனி காலநிலையும் வெயிலின் தாக்கமும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொட்டபெட்டா , தாவரவியல் பூங்கா, சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது .சமவெளி பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் மழையை கண்டு குதூகலமாகினர். இந்த மழையால் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News