உதகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
உதகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை ஒட்டி இலவச தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.;
நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், உலக வெறிநாய் தடுப்பு தினத்தை ஒட்டி இலவச வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் உதகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நீலகிரி ஏற்கனவே வெறிநாய் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களுக்கு கொண்டு சென்று வெறிநாய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
ஆண்டுக்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பகவத்சிங், உதவி இயக்குநர்கள் நீலவண்ணன், மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.