55.80 லட்சம் கிலோ பச்சை தேயிலை கொள்முதல்: இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர்

நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

Update: 2021-11-16 10:15 GMT

இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ.

இதுகுறித்து இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிற்சாலைகள் மூலம் கடந்த மாதம் 55.80 லட்சம் கிலோ பச்சை தேயிலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திற்கு தேயிலை வாரியம் பச்சை தேயிலை கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.14.74 நிர்ணயித்தது. கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கான மாத விலையை நிர்ணயிக்க அனைத்து தொழிற்சாலைகளின் நிர்வாக குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிதி நிலைமையை ஆராய்ந்து பரிசீலனை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த மாதத்திற்கு பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.14.75 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மஞ்சூர், கைகாட்டி ஆகிய 2 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களுக்கு கிலோவுக்கு ரூ.15 வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News