உதகை கலெக்டர் அலுவலகத்தில் அக்.4 முதல் மக்கள் குறை தீர்வு கூட்டம்
உதகை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 4-ந் தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.;
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு உதகை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 4-ந் தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் கலந்துகொள்ளலாம். கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களது மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மனுதாரர்கள் கைபேசி எண், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எண் கட்டாயம் ஆகும். எனவே, விண்ணப்பதாரர்கள் தவறாமல் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையுடன் வந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.