உதகை நகராட்சியில் வரும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம்

வருகிற 11-ம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் காலை 11 மணியளவில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

Update: 2021-10-09 10:30 GMT

உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி.

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. சுற்றுலா நகரம் என்பதால் கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இருப்பினும் சில இடங்களில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு உதகை நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

உதகை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நகராட்சி சம்பந்தமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடர்புடைய குறைகளை கண்டறிய வருகிற 11-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கட்கிழமை தோறும் காலை 11 மணியளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News