உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடத்தப் போவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.;

Update: 2021-11-22 11:01 GMT

முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மனு அளித்தனர்.

உதகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சரியாக கழிவுநீர் கால்வாய் இல்லை. நடைபாதை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் முறையாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஊராட்சி தலைவர் உங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர மாட்டோம் என்று கூறுகிறார்.

மேற்கண்ட வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News