உதகையில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும்விதமாக காவல்துறையினர் பல நல திட்டங்களைசெய்து வருவதாக டிஐஜி தெரிவித்தார்.

Update: 2021-12-24 11:45 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிஐஜி .

உதகை காவலர்களின் சிறுவர் மன்ற மண்டபத்தில் இன்று பழங்குடியினருக்கான நலத்திட்ட நிவாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மேற்கு மண்டல டிஐஜி முத்துசாமி பழங்குடியினருக்கு தண்ணீர் தொட்டிகள், போர்வைகள் மேசைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் உள்ள நல்லுறவை பலப்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் பழங்குடியினருக்கான பல நல்ல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து காவல்துறையினர் அதை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

அதேபோல் நீலகிரி மாவட்டம் கேரள கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளதால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை எனவும் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனக் கூறிய அவர் பள்ளி கல்லூரிகள் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து காவல்துறையினர் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் இடங்களில் ரோந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பழங்குடியின இளைஞர்களுக்காக காவல்துறை மூலம் இலவசமாக வாகன பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறிய அவர் அத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வசிக்கக்கூடிய பழங்குடியினருக்கு அவர்கள் கேட்கும் உதவிகளையும் காவல்துறையினர் செய்து வருவதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News