உதகை 19 வது வார்டில் நலத்திட்ட உதவி வழங்கல்
உதகையில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கினார்.;
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 19 வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஸ்ருதி கிருஷ்ணாவின் வெற்றி விழா உதகையிலுள்ள அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி 800 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் குமார், சக்சஸ் சந்திரன், அதிமுகவின் கவுன்சிலர் அக்கீம் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.