உதகை அருகே பழங்குடியின மக்களுக்கு எஸ்.பி., நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சோலூர்மட்டம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்கையூரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நீலகிரி எஸ்.பி., நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சோலூர்மட்டம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்கையூரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் கரிக்கையூரில் 28 குடும்பங்கள், நடூரில் 2 குடும்பங்கள் 30 பழங்குடியின குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 கம்பளிகள் வீதம் 60 கம்பளிகளை வழங்கி பேசினார்.
கொரோனா 3-வது அலை பரவி வரும் குழ்நிலையில் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கப்பட்டது.