உதகையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மருத்துவக்குழு அங்கீகரிக்கும் சிகிச்சைக்கான கட்டணத்தை திரும்ப வழங்காத காப்பீடு நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தமிழக அரசு நடைமுறைப்படுத்திய புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் ஓய்வூதியர்களை முழுத்தொகை செலுத்த கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
மருத்துவக்குழு அங்கீகரிக்கும் சிகிச்சைக்கான கட்டணத்தை திரும்ப வழங்காத காப்பீடு நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டி ஸ்டேட் பேங்க் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர்களிடம் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை கட்டணத்தை பெறும் விண்ணப்பங்களை நிராகரிப்பது, கிடப்பில் போடுவது கண்டிக்கத்தக்கது.
காப்பீட்டு திட்டத்தில் அரசின் விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படாததால் ஓய்வூதியர்கள் பயன்பெற முடியவில்லை. அரசு ஆணையை முழு அளவில் அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.