உதகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, உதகை ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
உதகையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், உதகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாந்தகுமாரி, கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி, சரண்டர் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில செயலாளர் கோவிந்தமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.