தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்: உதகையில் 10ஆயிரம் அபராதம்விதிப்பு

நகரில் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-01-06 15:19 GMT

உதகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மொத்தமாகக் கொட்டி வைத்த டிராவல் நிறுவனத்திற்கு  ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சி அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இருந்து வருகிறது. நீலகிரியில் உள்ள சோதனை சாவடிகள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் உள்ள தனியார் டிராவல்ஸ்ல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை மேடாக காணப்பட்டது.

உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை போல் குவிக்கபட்டிருந்ததால் 10,000 அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News