பராமரிப்பு பணிக்காக உதகை பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

ஊட்டி, குந்தா துணை மின் நிலையங்கள் மற்றும் அதன் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update: 2021-12-17 15:19 GMT
பைல் படம்

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா துணை மின் நிலையங்கள் மற்றும் அதன் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் பெறும் உதகை நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து, இத்தலார், எம்.பாலாடா ஆகிய இடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறைஹட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயகண்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News