உதகை அதிகரட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

அதிகரட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியாகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-15 13:26 GMT

அதிகரட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அங்கிருந்து அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலா, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சகொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேன், கொலக்கொம்பை, பென்காம் ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் வழங்க இயலாது என்று நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News