உதகை அருகே பொதுமக்களை மூளைச்சலவை செய்த மாவோயிஸ்ட் ஆஜர்

9.11.21-ந் தேதி அன்று வழக்கில்சம்பந்தப்பட்ட கர்நாடகாமாநிலத்தைசேர்ந்த சாவித்திரியைபோலீசார் வயநாடு பகுதியில் கைது செய்தனர்.

Update: 2022-03-03 16:00 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மாவோயிஸ்டுகள் வந்து சென்றனர். அவர்கள் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களிடம் மூளை சலவை செய்தனர். அங்கு அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினர். இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுகல்கம்பை கிராமத்துக்கு வந்து சென்றவர்களை தேடி வந்தனர்.

9.11.2021-ந் தேதி அன்று வழக்கில் சம்பந்தப்பட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சாவித்திரியை கேரளா போலீசார் வயநாடு பகுதியில் கைது செய்தனர். அவரை போலீசார் திருச்சூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து சாவித்ரியிடம் விசாரணை நடத்த ஊட்டி கோர்ட்டில் கொலக்கொம்பை அனுமதி பெற்றனர். தொடர்ந்து போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து சாவித்திரியை உதகைக்கு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இன்று உதகை கோர்ட்டில் மாவோயிஸ்டு சாவித்திரியை போலீசார் ஆஜர்படுத்தினர். உதகை கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி இல்லாததால் சாவித்திரியை கோவை மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். நாளை ஊட்டி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.

Tags:    

Similar News