உதகையில் நடந்த காவல்துறை சந்திப்பு கூட்டம்

மாணவர்கள் எளிதில் புகார் அளிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.;

Update: 2021-11-16 17:30 GMT

போலீஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி நிர்வாகிகள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுடன் மாவட்ட காவல்துறை சந்திப்பு கூட்டம் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கி பேசினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் ஆஷா மனோகரி ஆகியோர் கலந்துரையாடல் நடத்தினர்.

கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழுக்கள் அமைக்க வேண்டும். புகார் பெட்டி, ஆலோசனை முகாம் என செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் எளிதில் புகார் அளிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News