உதகையில் சிறுமிக்கு சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
நீலகிரி மாவட்டம் உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
உதகை அருகே காந்தள் பகுதியை சேர்ந்த லோகநாதன், 28, மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பர்வீன் என்ற பெண்ணிடம் பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக அடிக்கடி அவரது வீட்டுக்கு லோகநாதன் சென்றுள்ளர்.
அப்போது, பர்வீனின் 16 வயது பெண் குழந்தையை, லோகநாதன் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்த பெற்றோர், இதற்கு காரணம் லோகநாதன் என்பது தெரியவந்தது.
இது குறித்து உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணைக்கு பின், போலீசார் லோகநாதன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.