உதகை நகர் பகுதியில் கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார்

உதகை நகர் பகுதியில் கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-28 13:03 GMT

உதகையில் பிடிப்பட்ட கஞ்சா வியாபாரி

நீலகிரி மாவட்டம் உதகையில் பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ள உட்லண்ட்ஸ் குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற உதகை B1 காவல் துறையினர் .அங்கு சந்தேகத்திற்க்குரிய நபரை வளைத்து பிடித்து விசாரித்தனர்,

விசாரணையில் அவர் பெயர் வீர சிவகுமார் (54) , ஈஸ்வரன் கோயில் வீதி, திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது .

மேலும் அவர் வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா வையும் கைப்பற்றி வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News