பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-02-17 07:10 GMT

ஊட்டி நகராட்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19.02.2022 அன்று நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு இன்று ஊட்டி நகராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் வரையும், காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்து பென்னட் மார்க்கெட் வழியாக ரோகிணி சந்திப்பு வரையும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வஜ்ரா வாகனம் முன்னால் சென்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமையில் நடந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News