உதகை மார்க்கெட்டில் பாக்கெட்டில் வைக்கப்பட்ட தக்காளி புகைப்படம் வைரல்

நீலகிரியில் இதுவரை இல்லாத அளவில் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு கிலோ 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2021-11-22 15:01 GMT

பாக்கெட்டில் வைக்கப்பட்டுள்ள தக்காளி.

தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் விலை ஏற்றம் கண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு, பிற மாநிலமான கர்நாடகா, தமிழக மாவட்டங்களான ஒட்டன்சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டன் கணக்கில் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் இதுவரை இல்லாத அளவு தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி மூன்று மடங்காக விலை உயர்ந்து இன்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தக்காளி விலை உயர்வால் ஊறுகாய் பாக்கெட்டில் விற்பது போல் 18 ரூபாய்க்கு இரண்டு தக்காளி என கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News