உதகையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி முகாம்
இந்த முகாமில் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்து குறிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடிகளில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் வாரியாக 1,980 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இன்று உதகை நகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 396 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ரெக்ஸ் மேல்நிலைபள்ளியில் நடந்தது. முகாமை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்களை கையாளுவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 8 மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மேற்கொள்ளும் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்தல் நடக்கும் முன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கு தயாராக வேண்டும். வாக்காளர்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்து குறிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.