நீலகிரியில் சதத்தை கண்ட பெட்ரோல் விலை
உதகையில் பெட்ரோல் 100 .18 ரூபாய்க்கும், டீசல் 94.06 ரூபாய்க்கும் விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக நேற்று ஒரு லிட்டர் 100 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையானது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 ரூபாயைக் கடந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 .18ம், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.06 ஆக விற்கப்பட்டது. அத்துடன் ஒரு லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் விலை ரூ.102.72 காசுகளாகவும் விற்பனையானது.
இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் உடனடியாக விலை குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் நீலகிரியில் இருந்து மலை காய்கறிகள் பிறமாநிலங்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதால் பொருட்கள் விலை கடுமையாக உயரும் இது மக்களிடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என காய்கறிகள் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் தெரிவித்தார். எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் விலைக்கு தீர்வு காண வேண்டும் என மலை மாவட்டத்திலுள்ள காய்கறி ஏற்றுமதியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.