உதகை அருகே முள்ளிகூர் அனிக்காடு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு

உதகை அருகே அடிப்படை தேவைகளை செய்து தராத பட்சத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தனர்.;

Update: 2022-03-21 13:23 GMT

உதகை அருகே உள்ள அனிகாடு கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை அருகே உள்ள அனிகாடு கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த கிராமம் டாக்டர் கலைஞர் ஆட்சியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது பட்டா வழங்குவதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சியில் மறைந்த தலைவர் காமராஜர் நூறாவது பிறந்த நாளன்று சுமார் 115 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இங்கு இதுவரைக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் கூறினார்.

குறிப்பாக தண்ணீர், நடைபாதை, வடிகால், கம்யூனிட்டி ஹால், அங்கன்வாடி, போன்ற முக்கியமாக உள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லை இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த பணிகளும் செய்யப்படவில்லை என ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அடிப்படை தேவைகளை செய்து தராத பட்சத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News