நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி கலெக்டரிடம் மனு

தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க மனு.;

Update: 2021-12-20 17:15 GMT

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பசத்திரத்தில் கடந்த வாரம் அரசு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி நடந்தது.

அதே பகுதியில் வசிக்கும் சில குடும்பங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டு உள்ளது. விடுபட்ட அந்த குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News