கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கிலோவுக்கு கூடுதலாக ரூ.2 வழங்க அனுமதி

நீலகிரி மாவட்டத்தில் தொழில் வணிகத் துறையின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது

Update: 2021-10-17 10:00 GMT

நீலகிரி  மாவட்டம், கைகாட்டி கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கிலோவுக்கு கூடுதலாக ரூ.2 வழங்க அனுமதி

நீலகிரி மாவட்டத்தில் தொழில் வணிகத் துறையின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.அவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.2020-2021-ம் ஆண்டில் கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை ஈட்டிய லாபத்தில் இருந்து, தொழிற்சாலை களுக்கு பச்சை தேயிலை அளித்து வரும் விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் விலையை விட கூடுதலாக கிலோ ஒன்றுக்கு ரூ.2 வழங்க அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இன்கோசர்வ் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ கூறியதாவது: கூட்டுறவு இயக்கத்தின் மூலம் பெறப்படும் லாபத்தினை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பது அதன் தலையாய குறிக்கோள் ஆகும்.அந்த வகையில் கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை 2020-2021-ம் ஆண்டில் ஈட்டிய லாபத்தில் இருந்து ரூ.34 லட்சத்து 8 ஆயிரத்து 844 நிதியை கூடுதல் தேயிலை பணமாக பச்சை தேயிலை வினியோகித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.2 விலை கூடுதலாக கிடைக்கும். இதனால் பச்சை தேயிலை வினியோகித்து வரும் 600 பெண் சிறு தேயிலை விவசாயிகள் உள்பட 1,500 பேர் பயனடைவார்கள். இதன்மூலம் கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, பிற கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. மற்ற கூட்டுறவு தொழிற்சாலைகளும் இதுபோன்று லாபம் ஈட்டி சிறு தேயிலை விவசாயிகளுக்கு கூடுதல் விலை அளிப்பதை தங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் தேவையை அறிந்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது என்றார்  அவர்.

Tags:    

Similar News